பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

கானனுக் கனுப்பியே முத்தங்கி அதையுங்

கனமாக வொருதட்டில் தானெடுத்து வைத்து தங்கத்தின் தொட்டிலை யெடுத்து அதிலே தன்மகனைச் சற்றுநேரம் போட்டாட்டிப் பார்த்து தனக்குத் தந்த முத்து ரவிக்கை . எடுத்துத்

தான் பூட்டிக் கண்ணாலே தானழகு பார்த்தாள் செப்பரிய மூங்கிற் குழாய் திறந்து 山s)間「& T

சீனத்துப் பட்டெடுத்து தானுடுத்திக் கொண்டு இப்படி யுடுப்புகள் வந்ததற்கு இனி

என்னதான் சொல்லுவானோ பாதகன் காணன் என்மனது போலயடி மீனாள் தாயே இருக்க வேணுங் கானனுட மனதென்று சொல்லி நன்மைதர வேணுமடி மீனாள் - கானன். நல்லவாக்கு சொல்லவேனு மீனாட்சி" யென்று நடந்து வந்தா ளப்போது மாசா கானு

ராசாதிபதி முன்னே வரும் வேளை தனிலே

கான்சாகிபு கோபம்

கானகத்துப் புலி போலச் சீறி கானன்

கண் சிவந்து பொறி பறக்கப் பார்த்தேது சொல்வான் "ஏதடி புதுச்சேரிப் பெண்ணே உனக்கு

இத்தனை யுடுப்புகள் கொடுத்தவர் களாரு கனகோப மாகவே கேட்டான் அப்போ

கன்னியவள் மாசாவு மேது சொல்வாளாம் ஆண்டவனே துரைகானு சாய்பே எங்கள்

அண்ணன் தாண்டவ ராயன் கொடுத்தனுப்பி வைத்தான் மாஷாவு மிதுசேதி சொல்ல - அப்போ

மதனதுரை கான்சாயபு யேது செய்யலுற்றான் மகன்தலையி லிருந்த குல்லாவை . கானு

வாங்கிவரச் சொல்லிரண்டு கல்லையுங் கழட்டி உகந்த சராப்பை" யழைத்து - . இது

ஒரு கல்லுவிலை யென்ன பெறுமென்று கேட்டான் "அரண்மனை விலையாக விற்றால் ஒன்று

அறுநூறு பொன்னுக்கு வாங்கலாங் கல்லை

46, மாஷா, கத்தோலிக்க கிறித்தவச்சியாயிருந்து முஸ்லீம் ஆனவள். அவள் மீனாட்சியை வணங்கியிருக்கமாட்டாள். ஆனால் கதை கேட்பவர்கள் இந்துக்கள், எனவே பாடகர் மாஷா மீனாட்சியை நினைப்பதாகச் சொன்னார்.

47. ஷராப் தங்கம், முத்து, வைரம் முதலிய பொருளகளின் விலையை

மதிப்பவன்.