பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தாண்டவராயன் சிந்தனை

சிங்க மேயர்க் காரமாரி

சேதி நான் வேளாளன் சொல்லுகிறேன் கேளும்

தங்கச்சி யென்றல்லோ யிருந்தேன் எனக்குச்

சத்ராதி யானாளே திசை மதுரை மாசா மைத்துனன் என்றல் லோயிருந்தேன் எனக்கு

மாத்தானாய் வந்தானே மதுரைத் திசைகானள் துரிசா" உன்னுறவு பகையாச்சே என்று

சொல்லு போமோ சாவுக்குள்ளே பலிமாறி இனிமேலுந் திருபுவன மிருந்தால் நம்மை இருக்கொட்டான் வடக்கே தானடக்க வேணுமென்று தனிவீர தாண்டவ ராயன் அந்த கடினத்திலே பயண மென்றுதன் சேனைக் குரைத்து மாப்பிள்ளை கப்ரமண்ய தேவா ஒரு

வார்த்தை நான் வேளாளன் சொல்லுவேன் கேளு தப்பாமல் திருபுவனந் தனிலே நீங்கள்

தயாரா யிருக்க வேனுங் கானுதுரை வரு வான்

தளவாய் ஆற்காடு செல்லுதல்

ஆற்காடு போரேன் தம்பி ஆடு

மாசமோ ஆறு வருஷமோ தெரியாது மார்க்கமாய் நான் வருமட்டும் நமது

மறவர் திருப்புவனம் பத்திர மென்று உறுதிகளும் வெகுவாகச் சொல்லி அந்த

உத்தமனுங் குதிரைமேல் சீனிவைத் தேறி நடந்திட்டான் தாண்டவ ராயன் அந்த

நாழியிற் சிவகங்கைப் பேட்டை வந்து சேர்ந்தது தடம்பரவும் பொன்மலர் செய்து நல்ல

தங்க மலர் வெள்ளி மலர் தன்கையி லெடுத்து விருதுரண பேரிகை முழங்க குதிரைக்

மேலிட்ட நகப்யத்துங்கா முழங்க இருபுறமும் வெண்கவரி வீச நல்ல

எறியீட்டி வெடிக்காரர் முன்னே நடக்க சுத்திக் குடைக்காரர் சூழ குதிரைக்

காரர்படை வீறுடனே கடல்போல் நடக்க வெறி வெண் சாமரைகள் வீச முல்லை

வேளாளன் புறப்பட்டான் சொல்ல முடியாது

50. சத்ராதி சத்துரு, விரோதி. 50 அ) துரிசா - விரைவாக