பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

தேவேந்திரன் கொலுப் போலே அப்போ

திடீரென்று பிள்ளைமார் நடந்திட்டா ரப்போ இரு பிள்ளை மார்களும் வந்து அங்கே

ஏழு பிள்ளைமா ரிருக்கு மிடத்தில் நின்று ஆனையிட்டுக் கீழே யிறங்கி தளவர்

அன்பாக வொன்பது தட்டெடுத்து வரச்சொல்லி ஒரு தட்டி லொரு சோடு முத்து அப்போ

ஒரு தட்டி லொரு சோடு பச்சையும் வைத்து ஒரு தட்டில் வைடூரியக் கல்லு அப்போ ஒரு தட்டில் மரகதக் கல்லொன்று சேகரம் செய்து ஒரு தட்டி லாயிரம் பொன் முடிப்பு அப்போ

ஒரு மிக்கத் தட்டாலஞ் சேரம் செய்து தம்பி வா தாமோதரம் பிள்ளை நாலு

தட்டை யெடுத்து வாவென்று சொன்ன மாத்திரத்தில் கங்கை குலம் வம்மிசம் அண்ணே நாமும்

காரா ளல்லவோ முல்லை மணிமார்பா துலுக்கனுட சந்திக்குப் போறோம் நமக்கு

சந்திப்பு எப்படி தெரியுமடா அண்ணே எத்தனை உயர்ந்த குலமாய் நாம்

இருந்தாலும் குமார வர்க்கப் பிள்ளை யென்று பேரு திருச்சிராப் பள்ளிக்கு எவன் துரைதான் இந்த

தேசத்துப் பாளையக் காரரெல்லாம் பிள்ளை தகப்பனுட வளைவுக்குப் பிள்ளை வந்தால் தனங் கொண்டு போய் வைந்து சலாம் பண்ணவேனும் காரியங் கொள்ளுமட்டுந் தம்பி அவன்

காலையுங்கூட பிடிக்கவேணு மென்றான் எனக்கொன்றுந் தெரியாது அண்ணே உனக்

கெப்படி யிருக்குதோ அப்படிச் செய் என்றான் அப்படியே நல்லது தம்பி நீயும்

அசையாமல் தட்டுகளை எடுத்து வாவென்று இருபேரு மொன்பது தட்டெடுத்து இழு

பாராவையுங் கடந்த கூடாரம் வந்து

நவாபிடம் பேசுதல்

நவாபு சமூகத்தில் நின்று 5 ಘುಟ

நலங்கொண்ட தங்கமலர் பொன்மலர் எடுத்து

தீப சுகம் பலித்தில் வைத்து திருஷ்டிச்

சிலையைக் கையிலே சீக்கிர மெடுத்து

நவாபை மூன்று தரஞ் சுற்றி சாயபு

நம்முடை சலாம் வருகுதென்று சலாம் செய்து