பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94.

அண்ண னில்லை தம்பி யில்லை யெனக்கு இப்போ

ஆதரவு கோட்டைக்கு ளொருத்தரு மில்லை உங்களையே நம்பினே னானும் எனக்கு

ஒருவர் துணை யில்லையடா சிப்பாய் மாரே மாசத்துக் கொன்பது ரூபாய்" சம்ப்ளம்

வாங்கியே தின்றீரே சிப்பாய் மாரே ஐந்தாறு நாளைக்கு நீங்கள் . நித்திரை

ஆகார மெல்லாம் விட்டிடுங்கள் சொன்னேன் பெண்டாட்டி ஆசை வைத்த பேர்கள் என்

பின்னால் வரவேண்டாம் சிப்பாய் மாரே இந்தச் சண்டை கெலித்தேனே யானால் உங்களுக்கு இருவது பொன்னுத் தியோகங் கொடுக்கிறே நானுங் கைகளுக்குத் தங்கக் காப்புப் போட்டு உங்களை

கனமாக வைக்கிறேன் சிப்பாய் மாரே என்று சொல்லி கான்சாய்பு துரையும் இப்போ

இதமாக ராமலிங்க கொல்லனை யழைத்து. நாலு வெகுமதியுஞ் செய்து அப்போ

நலமாக பீரங்கி திருப்பிவிடச் சொன்னான்

கோட்டைக்குள்ளிருந்து போர்

திருப்பியே பாளயத்து மேலே கொல்லன்

தீர்த்திட்டான் குண்டுபோட் டைந்தாறு வேட்டு பாத்திட்டான் பொல்லாத பிரிட்டன் அப்போ

பட்டாளம் பளீரென்று உத்திரவு பண்ணி ஒன்பது வெங்கல பீரங்கி துப்பாக்கி

ஒன்று மோர்ஜாமேல் திருப்பினான் பிரட்டன் பிரட்டன் துரை பீரங்கி திருப்பி அப்போ

பிணக்காடா யடிக்கிறான் பொன்மதுரை தன்னை காணனோ திருப்பிய பீரங்கி - அங்கே

கணக்கில்லை தெப்பக்குளங் கொள்ள வில்லை குண்டு மானங் கவுந்திட்டாப் போல - அங்கே

வருகிறதே பிரட்டனிட பீரங்கிக் குண்டு நெல்லு பொரி பொரித்தது போலே அப்போ

நிலந்தாவிக் கொல்லுதே சஞ்சீவி குண்டு சோளப் பொரி பொரித்தது போலே பிரட்டன்

சொல்லிச் சொல்லி அடிக்கிறான் பீரங்கிக் குண்டு கிழக்கு முகம் கொத்தளந் தனிலே ஒரு

குறுக்கு மூலைக் கோட்டைதனை யிடித்தான் பிரட்டன்

83 அக்காலச் சம்பளம் சிப்பாய்க்கு 9ரூபாய் மானம் வானம்