பக்கம்:காப்டன் குமார்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ஆனால் நீண்ட நேரத்திற்குப் பிறகு குமார் மட்டும் தனியாக அவனது குடிசையை நோக்கி வந்து கொண்டிருந்தான். மன்னாடியோ மரத்திலிருந்து இறங்கவேயில்லை. -- ஆம்! அவன் இதிலெல்லாமா ஏமாந்து விடக் கூடியவன்? ஜீப்பும் - போலீஸாம் தடபுடலாக வந்தால ஆள் ஒளிந்து விடுவான் என்று ஆழம் பார்க்க முதலில் குமாரைத் தனியாக அனுப்பி யிருக்கலாமல்லவா? அவர்கள் சுற்றிலும் எங்காவது வந்து பதுங்கிக் கொண்டிருப்பார்கள். குமாரின் கையில் ஊதலைக் கொடுத்து அனுப்பியிருப்பார்கள். இந்த வியாபாரத்தில் யாரையாவது யாரேனும் நம்பு வார்களா? நம்புகிறவன் பைத்தியக்காரனல்லவா? குடிசைக்குள் அடியெடுத்து வைத்த குமார் திடுக் கிட்டான். குடிசை தலைகீழாகப் புரண்டு கிடந்தது. காலிலே சுற்றிக் கொண்ட கிழிந்த வலையை ஒதுக்கி எறிந்து விட்டு வெளியே வந்த குமார், மன்னாடி... மன்னாடி...!!?? என்று கத்தினான். அந்தப் பிராந்தியம் முழுவதும் அவனது குரலைப் பிரதிப் பலித்ததே தவிர வேறு எதிர்குரலும் எழவேயில்லை. ஆம்! பதில் கொடுக்க மன்னாடிக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?