பக்கம்:காப்டன் குமார்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O2 கூடதா? ஏன் நடுவழியில், நடுக்கடலில் குதித்து இப்படி இந்தப் பாவிகளிடம் சிக்கித் தவிக்க வேண்டும்? அங்கே சென்றிருந்தால் இதற்குள் மாமா வையும் பார்த்து சாந்தியையும் சந்தித்திருக்கலாம் அல்லவா?’ என்றெல்லாம் எண்ணினான். அதற்குள் மன்னாடி, என்ன தம்பி யோசிக்கிறே? நான்தான் சொல்லிவிட்டேனே; நீ ஏன் "லேட்டு ன்னு சொல்லு?’ என்றான், ஒன்றுமே தெரியாதவன் போல். குமார் அதிகம் எதையும் விவரிக்காமல், போலீஸ் காரனைத் திடீரென்று கண்டதையும், தனக்குப் பயம் பிடித்துக் கொண்டதையும், உடனே சட்டென்று அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள, பளிச்சென்று மடியிலிருந்த பொட்டலத்தை எடுத்து எட்ட வீசி விட்டு, கல் இடறினாற் போல் கீழே விழுந்துவிட்ட தையும்; போலீஸ்காரன் துாக்கி நிறுத்தி மண்ணைத் தட்டி, முதுகை தட்டாமல் விட்டுச் சென்ற அதிர்ஷ் டத்தையும், அவன் தலை மறைந்ததும் பொட்ட லத்தைப் பொறுக்கிக் கொண்டு ஓடிவந்து விட்டதை யும் ஒரே மூச்சில் கூறி நிறுத்தினான். மன்னாடி இதில் ஒரு முக்கியமான காட்சியைத் தான் நேரில் பார்த்துவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்திருச்கிறான். ஆனால் அதன் முடிவு; தான் பயந்ததற்கு மாறாக இத்தனை சுபமாக இருக்கு மென்று அவன் நினைக்கவில்லை. குமாரின் சம யோசித புத்தியை அவனால் புகழாமல் இருக்க முடிய வில்லை. ஆனால் குமாருக்கு அதுவா வேண்டும்?