பக்கம்:காப்டன் குமார்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மருமகனே! அப்பா போய் விட்டாரா?? என்று என்னைக் கட்டிக் கொண்டு அழுதார். நானும், மாமா மாமா என்று கட்டிக் கொண்டு அவருக்கு மேல் நடித்து விட்டேன். இல்லாவிட்டால் இன் ஸ்பெக்டர் சார், என் தங்கையைத் தேடிக் கண்டுபிடிக்கும்வரை பட்டணத் தில் ஒதுங்க இடமும்; உண்ண உணவும் வேண்டு மல்லவா? என்னை ஏமாற்றியவர்களைப் பதிலுக்கு நானும் ஏமாற்றிக் கொண்டு இருந்து விட்டேன். இந்தாருங்கள், இதுதான் என்னுடைய போலி மாமா வின் விலாசம். வீட்டிற்குக் கீழே பாதாளத்தில் ஒரு சிறிய ஊரே இருக்கிறது: இதையெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டியது இனி உங்கள் பொறுப்பு! இதோ, இவர்தான் என்னுடைய உண்மையான மாமா?? என்று தனது டிராயரிலிருந்த தகர டப்பியைத் திறந்தான். அதனுள்ளிருந்து ஒரு 'குருப் போட்டோ துள்ளிக் குதித்தது. 'இதன் மத்தியில் இருப்பவர்தான் என் மாமா. இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரோ, இல் லையோ அதுகூடத் தெரியாது ஆனால், இந்தப் படத்தை வைத்துக் கொண்டு நீங்களே பாருங்கள் இன் ஸ்பெக்டர் சார்; யாராவது அந்த ரெளடியை என் மாமா என்றால் நம்புவார்களா?’ என்று என ஒரு நீண்ட பிரசங்கமே செய்து முடித்தான் குமார். கருணாகரனும் கற்பகம்மாளும் அப்படியே பிரமித்துப் போய் விட்டனர்.