பக்கம்:காப்டன் குமார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பார்த்தாலும் ஒரே சோகமயமான காட்சிகள்! அழகிய மாடமாளிகைகளும், ஆகாயத்தை அளாவி நிற்கும் 'பையா'க்களும் - பர்மாவில் கோவிலை அவர்கள் மொழியில் 'பையா' என்றுதான் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் 'பகோடா' என்று பெயர்) அல்லவா களையிழந்து நிற்கின்றன?--

யுத்த காலத்தைப்போல, பீதியோடு இந்தியரும், பர்மியரும் எதைப்பற்றியோ மூலைக்கு மூலை கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். 'எப்பொழுது பார்த்தாலும் உற்சாகமாக இருப்பார்களே இந்தியர்கள், மகிழ்ச்சிபொங்கும் அவர்களது முகங்களில் இத்தனை வேதனைக்குறி எங்கிருந்துதான் வந்ததோ?'--

சிந்தித்தபடியே ரங்கூனின் அழகிய வீதிகளின் வழியே வந்து கொண்டிருந்தான் குமார். அங்கே அவன் கண்ட காட்சி!

இந்தியர்களின் கடைகளின் முன்னால் பெரிய பெரிய டாங்கிகள் வந்து நின்றன. பட்டாளத்துக்காரர்கள் இந்தியர்களின் கடைகளினுள் புகுந்து அவர்களை வெளியே இழுத்துத் தள்ளிக் கதவுகளை அடைத்தனர். அங்கே கூட்டம் சேர்ந்து நிற்கவும்; கூடிப் பேசிக் கொள்ளவும் விடாமல் அடித்து விரட்டினார்கள். இதெல்லாம் என்ன?

காரணம் புரியாமல் விழித்தான் குமார். அவன் மனம் மிகவும் வேதனையுற்றது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மேலே தன் வீட்டிற்குப்போக அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. நேராக