பக்கம்:காப்டன் குமார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பாடு படுத்த வேண்டும்? வழியெல்லாம் பார்த்தேன்; மனம் பொறுக்கவில்லை. சுவான் உனக்குத் தெரியுமா; ஏன் ஊரே இப்படி மாறிவிட்டது?" என்று ஆவேசத்துடன் கேட்டான் குமார்.

தன் நண்பன் தனக்கு என்ன புதியவிஷயத்தை சொல்லப்போகிறானோ; அது எத்தகையதாக இருக்குமோ என்று எதையும் தாங்கும் இதயத்துடன் இருந்தான் குமார். ஆனால் சுவான் கூறிய விஷயமோ குமார் சேகரித்து வைத்திருந்த அத்தனை தைரியத்தையும் அரை நொடியில் தவிடுபொடியாக்கி விட்ட து!

"பர்மாவில் இந்தியருக்கு இடமில்லையாம். பிழைப்பைத் தேடி வந்திருத்கும் இந்தியர்கள் எல்லாரும் இடத்தை காலி செய்துவிட்டு உடனே இந்தியாவுக்குக் கப்பல் ஏறிவிட வேண்டுமாம்."

குமாருக்கு ஒரு கணம் தலையே சுழல்வதுபோல் இருந்தது. சுவானையே ஒரு கணம் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுவானின் தந்தையும் ஓர் இந்தியரே. பிழைப்புத் தேடி வந்த குமாரின் தந்தையைப் போலவேதான் அவரும் பர்மா வந்திருந்தார். வந்த இடத்தில் வாழ்க்கை வளமாயிற்று. சீனத்துப்பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். இரண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார். ஏழெட்டுப் பங்களாக்களையும் கட்டிக்கொண்டார். துண்டை உதறிப்