பக்கம்:காப்டன் குமார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வில்லை. ஏன் தம்பி! குடிசை வீட்டுச் சோறு எப்படியிருக்குமோன்னு யோசிக்கிறியா? வா-தம்பி, என் ரெண்டு பெண்சாதியும் அப்படியொண்ணும் முட்டாள் இல்லே; சாதாரண சமயமாயிருந்தா நீங்க இந்த வீட்டிலே அடி எடுத்து வச்சிருப்பீங்களா? எஜமான் வீட்டுக் கு ழ ந் ைத ங் க சாப்பிடப் போகுது?ன்னு இன்னிக்கு உங்களுக்காக ஸ்பெஷலாக விருந்து பண்ணியிருக்கா. நீ சாப்பிடாட்டாத் தங்கச்சியும் சாப்பிடாது-அப்புறம் நானும் சாப்பிட மாட்டேன்; அதைப் பார்த்து என் பெண்சாதியும் பட்டினி கிடப்பா. ஆனால் ஒண்னுமே புரியாத என் பட்டாளங்கள் மட்டும் பசி பசி ன்னு ஒப்பாரி வைக்கும். உனக்கு இத்தனையும் சம்மதம்தா னான்னு சொல்லு தம்பி! நான் தயார்?’ என்றான் திருமுருகு. ■ குமார் வாய்விட்டே சிரித்து விட்டான். இப்படித் தான்;துக்கம் தலைதுாக்கும் போதெல்லாம் திருமுருகு தன் அப்பாவிடம் ஏதாவது சொல்லி அவர் மனததை மாற்றிவிடுவான். சாப்பாட்டுக் கடை முடிந்ததும் குமார் முருகுவின் மனைவியிடமும் குழந்தைகளிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான். சாந்தியைத் திருமுருகு தூக்கிக் கொண்டான். அன்று கப்பல் புறப்படுகிற தினமாகையால் தெருவெல்லாம் திருவிழாவாகக் காட்சியளித்தது. சாரிசாரியாக எறும்பு ஊர்வதுபோல மக்கள் அணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/29&oldid=791244" இலிருந்து மீள்விக்கப்பட்டது