பக்கம்:காப்டன் குமார்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சாந்தி வருவாள் என்பதுதான் நிச்சயமா? இறுதியாக குள் இரவுச் சாப்பாட்டிற்கான மணியும் அடித்தது. சாப்பிடுகிற வேளையானதும் பெரியவர் குமாரை தேடிக்கொண்டு வேகமாக அவன் இருக்கிற இடத் துக்கு வந்தார். மாலையிலே டீ கூடச் சாப்பிடாமல் அல்லவா இருக்கிறான்? பெரியவரைக் கண்டதுமே குமாரும் குஷியோடு அவருடன் சாப்பிடக் கிளம்பிவிட்டான். வயிறு நிறையச் சாப்பிட்டான். ஆனால் சீக்கிரமாகவே சாப் பிட்டு எழுந்திருந்து விட்டான். பிறகு மற்றவர்களுக் கெல்லாம் பரிமாறுவதில் உதவி செய்தான். பெரியவர் இலையில் வேண்டுமென்றே இரண்டு அப்பளத்தைத் தூக்கிப் போட்டான். அவர் பயந்து கொண்டே, மற்றவர்களுக்கு வேண்டும். போதும் போதும்’ என்று அலறினார். பரவாயில்லை என் பங்கைத்தானே நான் உங்களுக்குப் போட்டேன். நான்தான் அப்பளமே போட்டுக்கொள்ளவில்லையே?’ என்று சிரித்த வண் ணம் கூறிக்கொண்டே முன்னால் சென்றுவிட்டான். சாப்பாடு முடிந்ததும் குழந்தைகளின்; கையைக் கழுவிவிட்டு, அதனதன் பெற்றோர்களிடம் ஒப்பித் தான. காப்டனுக்கும் பரிமாரினான். சமையல் பாத் திரங்களைக் கழுவுவதில் கப்பல் சிப்பந்திகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/42&oldid=791272" இலிருந்து மீள்விக்கப்பட்டது