பக்கம்:காப்டன் குமார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆழமான கடலில் மிதக்கும் ஓர் அபூர்வ பிராணியைப்போல் தன்னையே ஒருகணம் அவன் பார்த்துக் கொண்டான். சட்டென்று ஏனோ அவனைப் பயம் பீடித்தது. இருட்டிலே இருந்த அவனது தைரியத்தையெல்லாம் ஒளி விரட்டி விட்டது. காலும் கைகளும் துவண்டு விட்டாற்போல் இருந்தன. கரை எங்கே இருக்கிறது என்றே அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. சரி! அநாதையைப்போல் நடுக்கடலில் செத்து மிதக்க வேண்டியதுதான். எல்லோருடனும் கப்ப லில் சென்றிருந்தால் - அடுத்த கப்பலில் சாந்தி வரு வாள் என்கிற நம்பிக்கையாவது இருந்தது. இப் போது அத்தனையும் மண்ணாயிற்று. பெரியவர் களின் பேச்சைக் கேட்காமல் போனதற்குத் தண் டனை வேண்டாமா? அதோ அந்தப் பெரிய மீன்கள் நம்மைத் தின்று பசியாவது ஆறட்டும்’ என்று ஓர் எழுப்பு எழும்பினான்; வட்டவடிவமான ரப்பர் பெல்டின் ஒரு பகுதியில் தலையை வைத்துக் கொண் டான்; முன் பக்கம் மறுபாதியில் கால்களை நீட்டி மெத்தையிலே படுப்பதுபோல் கைகளை விரித்துக் கொண்டு கண்களை மூடினான். நடுவிலே அவனது முதுகில், அவ்வப்போது அலைகள் லேசாக மோதித் தட்டிக் கொடுக்க, அவன் தன் நினைவிழந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/73&oldid=791344" இலிருந்து மீள்விக்கப்பட்டது