பக்கம்:காப்டன் குமார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெரிய சமுத். திரம். அதிலே ஒரு படகில் உல்லாசப் பயணமா?. மேலே வெண்ணிலா சுகமாக வீசிக் கொண்டிருந்: தது. எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்கூட இப்படி ஒரு சுகம் அநுபவிக்க முடியுமா? குமார் தன் கவலைகளையெல்லாம் ஒரு கணம் மறந்து சந். தோஷப்பட்டான். படகோட்டி துருவித் துருவிக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் கூறினான். ஆனால் ஆதியோடு அந்தமாக உண்மை யைத்தான் அவன் கூறினான். குமார் மிதந்து கொண்டிருந்த லைஃப் பெல்ட், படகின் ஒரு மூலையில் கிடந்தது. குமாரின் வயிற் றில் பசி கோரமாக உருவெடுத்துக் கொண்டிருந்ததை எப்படித்தான் அந்தப் படகோட்டி புரிந்துகொண் டானோ? 'தம்பீ, இங்கே வந்து இந்தத் துடுப்பைக் கொஞ்சம் தள்ளு?’ என்று அழைத்தான். குமார் நிமிர்ந்து எழுந்தான்; முதுகெல்லாம் வலித்தது. பசி மயக்கம் அவனைக் கீழே தள்ளியது. ஆயினும் சமாளித்துக்கொண்டு படகின் குறுக்கே போடப்பட் டிருந்த மரக்கட்டையில் உட்கார்ந்து கொண்டான். படகோட்டிடைப்போல் அவனால் துடிப்பு போட முடி யாவிட்டாலும் மோசமில்லை; ஏதோ அப்படியும் இப் படியும் ஆட்டிக் கொண்டிருந்தான். பெயருக்குப் படகும் முன்னேறிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/75&oldid=791348" இலிருந்து மீள்விக்கப்பட்டது