பக்கம்:காப்டன் குமார்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. விஷங்களையும் சொல்லிவிடலாம் - சாந்தியும் அகப் படுவாள் என்கிற நினைப்புத்தான். ஆனால் அது மன்னாடியின் தலைக்கு எத்தனை பெரிய தீம்பாக வந்து முடியும் என்று எண்ணியதும் அதை ஒத்திப் போட்டான், குமார். டஇப்படிச் சுவேடகோன் பையா வின் வெளிப் பிராகாரத்தில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த குமார், திடீரென்று எழுந்து நின்றான். பையாவின் உள்ளேயிருந்து, நாற்பதுடன் எடையுள்ள வெண்கல மணியின் புனித ஒசை மிதந்து வந்து அவன் உட லெல்லாம் பரவிப் பரவசமூட்டியது. மறுகணம் இரு கரமும் தூக்கிப் புத்த பகவானை மானசிகமாக வணங்கிவிட்டு; விடு விடுவென்று வெளியே நடந் தான். அநியாயமாக வேண்டாத யோசனைகளில் பொழுதைக் கழித்து விட்டதற்காகத் தன்னையே நொந்துகொண்டு, பார்க்க வேண்டிய ஆளைத் தேடிப் போனான். நல்ல வேலையாக அந்த ஏஜெண்ட் குறிப்பிட்ட இடத்திலேயே குமாருக்காகக் காத்துக் கொண்டிருந் தார். குமாரைக் கண்டதுமே அவர் கவலையோடு, ஏன் தம்பி இன்று இத்தனை நேரம்? தோணிவர நேரமாயிற்றா அல்லது மன்னாடிக்குத் தான் உடம்பு சரியில்லையா? என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே கையை நீட்டினார். குமாரும் பதிலுக்கு, அதெல்லாம் ஒன்று மில்லை. எனக்குத்தான் மனமே சரியில்லை. மெது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/90&oldid=791379" இலிருந்து மீள்விக்கப்பட்டது