பக்கம்:காப்பியக் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை தமிழர் தம் வாழ்வை மங்காமல் காத்து வருவன அவர் தம் பண்டை இலக்கியங்களேயாகும். அவற்றுள் சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் அவை ஒட்டி எழுந்த ஐம்பெருங் காப்பியங் களும் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன. காப்பியங் களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி என்ற மூன்று பெருங்காப்பியங்களே இன்று நாட்டில் சிறந்துள்ளன. இப் பெருங் காப்பியங்கள் மூன்றனையும் ஒருசேர அனைவரும் பயில முடியாது. அது குறித்து அறிஞர்கள் இவற்றைச் சுருக்கியும் விரித்தும் தொகுத்தும் பொருள் விளக்கியும் பல்வேறு உரை நடை நூல்கள் எழுதியுள்ள னர். இத்துறையில் மூன்று நூல்களையும் ஆசிரியர் தம் பொன் எழுத்துக்களை இடையிடையே சேர்த்து, கதைப் போக்கும் தெளிவாக அமைந்து விளங்கும் வகையில் உரைநடையில் எழுதத் தூண்டிய அன்பர் தம் ஊக்கத் தால் மூன்று நூல்களையும் அவ்வப்போது தனித்தனி யாக எழுதி வெளியிட்டேன். அம்மூன்றன் தொகுப்பே இந் நூல். இந் நூலில் பெருங்காப்பியக் கதைகள் மூன்றனையும் சுருக்கி எழுதியிருப்பதோடு, அப்பெரும் புலவர் தம் நல்ல எழுத்தோவியங்களையும் இடையிடையே எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக எல்லா மக்களுக்கும் சிறப்பாக மாணவர் உலகுக்கும் இந்நூல் பயன் பெறத் தக்க வகையில் அமைந்துள்ளது. ஏற்றுப் பயன் கொள்க எனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்க்கலை இல்லம். ) பணிவார்ந்த, சென்னை -30. 1-10-1954. அ. மு. பரசிவானந்தம்.