பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4

மொழி பயின்றபோது இறைவன் நாமத்தையும் புகழையும் சொல்லிச் சிவபக்தியை வளர்த்து வந்தார். அது வரவரச் சிறந்து உரம் பெற்றது.

உலகத்தில் விலங்கினங்களும் பிறக்கின்றன: மனிதர்களும் பிறக்கிறார்கள். வளரவளர விலங்கினங்களின் உடம்பு பருக்கிறது; உள்ளமும் ஒரளவு விரிகிறது, ஆனால் அவற்றுக்கு வாக்கு வளம் உண்டாவதில்லை. மனிதன் ஒருவனுக்குத்தான் பொருளென்னும் பெருவரம் கிடைத்திருக்கிறது. வாயுடையவன் அவன்தான்; மற்றவை யாவும் வாயில்லாப் பிராணிகள் அல்லவா? ஆகவே பிறந்து மொழிபயிலும் பெருமையுடையவன் மனிதன் தன்கருத்தை வாயால் சொல்லத் தெரிந்தவன் அவன். மற்றவர்கள் பேசுவதைக் கண்டு வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கொள்ளும் குழந்தை மெல்ல மெல்ல அந்த மொழியில் தன் கருத்தைத் தெளிவாகச் சொல்லும் ஆற்றலைப் பெறுகிறது.

இந்த நாட்டில் இளங் குழந்தைகளுக்கு ஆண்டவன் திருநாமங்களையும் அவன் புகழையும் கற்றுக்கெடுப்பது பெற்றோர்களுக்கு வழக்கமாக இருந்தது. அவனே, இவனே என்னாமல் சிவனே சிவனே என்று சொல்லப் பழக்கினார்கள். ‘ராம கிருஷ்ணா கோவிந்தா, கிருஷ்ணா ராமா கோவிந்தா!' என்று இறைவன் திருநாமங்களைச் சொல்லித் தந்தார்கள், நாளடைவில் குழந்தை பெரியவனாகும் போது அந்த நாமங்களின் பொருனை உணர்ந்து இறைவனிடம் பக்தி கொள்ளும்.

காரைக்காலம்மையாரிடம் இந்தப் பயிற்சி மிகுதியாகப் படிந்தது. மொழி பயின்றபோதெல்லாம் இறைவன் திருநாமங்களையே மிகுதியாகப் பயின்றார். அவன் புகழையே பேசினார். அவற்றின் பொருள் உள்ளே பாய்ந்தது. அவனிடத்தில் பக்தி, காதல் தோன்றி வளர்ந்து சிறந்தது.

இப்போது மனத்தில் தோன்றிய காதலால் மனப்பயிற்சி வளர்ந்தது. இறைவன் திருவடியையே உள்ளத்தில் பதித்துத்