பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. அன்பு அறாது


 செல்வமோ ஆற்றலோ உள்ளவர்கள் தம்மை அடுத்தவர்களுடைய இடர்களைக் களையவேண்டும். அதுதான் முறை. எளியவர்கள் அத்தகையவர்களை அணுகி முறையிடுவார்கள். அந்தச் செல்வர்களால் தங்கள் வறுமை போகும் என்ற நம்பிக்கையினால் அவர்களை விடாது பின்பற்றி வழிபடுவார்கள். 'இவர்கள் எளியவர்கள். இவர்களுக்கு உதவி புரிந்து இவர்களுடைய துன்பத்தை நீக்க வேண்டும்' என்று எண்ணி உதவ முன் வருவதே செல்வர்களுக்கு அழகு. அப்படி அந்தச் செல்வர் செய்வதில்லை; செய்யமாட்டார் என்று யாரோ சொல்கிறார்கள்.

"இடர் களைவார் என்று அவரை, அணுகினேன். அவர் களைய மாட்டாரா?”

"ஆம்; இடர் களையார்.”

"அப்படியா இருக்கட்டும்; குற்றம் இல்லை.”

மேலே அந்தச் செல்வரைப் பற்றிய விமரிசனம் தொடர்கிறது.

பெரியவர்கள், செல்வர்கள் பிறருடைய இடரைக் களைய வேண்டும். செல்வம் இல்லதாதவர்களாக இருப்பினும் நல்ல மனம் உடையவர்கள் தம்மால் ஓர் உதவி செய்ய இயலா விட்டாலும், ஐயோ, பாவம்!' என்று இரங்குவார்கள். அவர் களிடம் செல்வம் இருந்தால் கண்டு இரங்கிக் கொடுத்து விடுவார்கள். அவர்களிடமோ பொருள் இல்லை. ஆனால் பிறர்