பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303

“பிணிகெட நல்கும் பெருந்துறைஎம்
பேரருளாளன்.

என்று மாணிக்கவாசகப்பெருமான் பாடுவார்.

'நரிகளெல்லாம்
பெருங்குதிரை யாக்கியவாறு
அன்றேஉன் பேரருளே.

என்று அவன் செய்யும் பேரருளை நினைந்து உருகுவார்.

பெரிய உபகாரியாகிய இறைவனை நோக்கிச் செல்லும் நெறி பெரு நெறி; அந்த நெறியைப் பேணி நடைபோடும் அன்பர்கள் சிறிய அருளையா வேண்டுவார்கள்? அவர்கள் அவனுடைய பேரருளையே வேண்டி நிற்பார்கள்.

பிரான் அவன்றன் பேரருளே வேண்டி.

பிரானை நோக்கும் பெரு நெறியில் படரும் வாழ்க்கையும் அவனுடைய பேரருளையே வேண்டி நிற்கும் ஆர்வமும் உடைய அன்பர்கள் இப்போது ஒருவகை ஏக்கத்தை அடைகிறார்கள். இந்தப் பெரு நெறி முடியாத நீள்நெறியாக இருக்கிறதே! அவன் பேரருளைப் பெற அவனை அடைய வேண்டுமே! அவன் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான்? அவனை எங்கே காணுவது? அவன் எங்கே இருக்கிறான்? எங்கும் இருந்தாலும் நாம் காணும் வகையில் எங்கே இருக்கிறான்? என்ற ஏக்கம் வருகிறது. பிரான் அவன் எங்குற்றான், எங்குற்றான் என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தே அலைமோதுகிறது. 'எந்தத் தலத்தில் அவனைக் காணலாம்? எந்த மலை முகட்டில் நாமும் காணும் வகையில் அவன் எழுந்தருளியிருக்கிறான்? அவனைக் காணுவது எங்கே, எங்கே? என்று அவர்கள் உள்ளத்தில், கேள்வி எழுந்து எதிரொலித்து ஒரே கேள்வி மயமாகப் பரவுகிறது.

இந்தப் பெரு நெறியில் சென்று பிரான் அவனை உணர்ந்தவர்களை அணுகிக் கேட்கலாமா? இப்படியே போய்க்கொண்