பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

மனிதன் உலகியலில் புகுந்து ஒரளவு முயற்சியினால் பெற்று விடலாம் என்று நாம் நினைப்பதும், நிலையாததுமாகிய பொருளுக்கே முன்னைத் தவம் வேண்டும் என்றால். எல்லாச் செல்வங்களுக்கும் மேலான செல்வமாகவும், என்றும் அழியாத இன்பத்தைத் தருவதாகவும் உள்ள அருளுக்கு எவ்வளவு காலம் தவம் செய்திருக்க வேண்டும்!

"நூதன விவேகி உள்ளம்
    நுழையாது; நுழையு மாகில்
பூதசன் மங்கள் கோடி
    புனிதனாம் புருடனாமே”

ன்று கைவல்ய நவநீதம் சொல்கிறது.

“பல்லுழி காலம் பயின்றரனை அர்ச்சிக்கின்
நல்லறிவு சற்றே நகும்"

என்பது சைவ சாத்திரம்,

இப்படிப் பல பிறவிகளில் உண்டான சம்ஸ்காரத்தால்தான் பக்தியும் ஞானமும் உண்டாக வேண்டும். அந்தப் பக்தியிலும் பல படிகள் உண்டு. பணக்காரர்களில் வேறுபாடு இல்லையா? லட்சாதிபதி என்கிறோம்; கோடீசுவரன் என்கிறோம்; பெரு நிலக்கிழார் என்கிறோம்; ஜமீன்தார் என்கிறோம்; குறுநில மன்னர், மன்னர், சக்கரவர்த்தி என்றெல்லாம் இருந்தார்கள். பணமும் பதவியும் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து நிற்கும் என்பதை இந்தப் பெயர்கள் காட்டுகின்றன. அப்படித்தான் முக்தியை அடையும் வரையில் ஒருவனுடைய பக்குவம் படிப்படியாக உயர்ந்து வரும்.

மலையின் மேல் ஏறுகிறான்; பழனி மலையில் ஏறுகிறான் என்று வைத்துக் கொள்வோம், அவன் கீழே இருக்கும் போது ஊரிலே ஒருவனாக நிற்கிறான், படியிலே ஏறும் போது வரவர உ ய ர் ந் து போகிறான். அவன்