பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அவருடைய பெருமையுணர்ச்சி பேசுகிறது. நாம் இப்போது ஆளாகி விட்டோம்; இனியும் பிறப்புண்டானாலும் ஏழு வகையாகத் தோன்றும் பிறப்பு எதுவானாலும் அவருக்கே ஆளாகியிருப்போம் என்கிறார்.

ஏழுவகைப் பிறப்பாவன: தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்கால் விலங்கு, மக்கள், தேவர் என்னும் ஏழு.

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டும்”

என்பதனால், ஊரும் புழுவுக்கும் இறையருளால் பக்தி உண்டாகலாம் என்பது தெரியவரும்.

ஆளாவதில் ஒரு பெருமிதம் இருக்கும். முதலில் விசுவாசத்துடன் வேலை செய்யப் புகுந்த ஆள், ஆசை மேலீட்டால் அந்த விசுவாசம் குறையும்படி பேசலாம். இங்கே சிவபெருமானுக்கு ஆளாகிய அம்யைாருக்கு எப்போதாவது அன்பு குறையுமா?

“என்றைக்கும் அவருக்கே நாம் அன்பாக இருப்போம்” என்கிறார்.

அவருக்கே நாம் அன்பாவது.

ஆளாக வந்தவனுக்கு வேறிடத்தில் வேறொருவர் அதிகக் கூலி கொடுப்பார் என்றால் அங்கே மனம் தாவும். ஆசைப்படுகிற மனம் ஓரிடத்தை விட்டு ஓரிடத்துக்குத் தாவுவதுதானே? பெரிய வள்ளல்கள் தம்மிடம் கொடை பெற்றவர்கள் வேறு ஒருவரிடம் போகாதபடி கொடுப் பார்களாம்.

“செருமான வேற்சென்னி தென்னுறந்தை யாந்தம்
பெருமான் முகம்பார்த்த பின்னர்—ஒருநாளும்