பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

369

வாகக் கூறினால் அவர்களுக்கு இரவிலும் அதை உண்ணுவதில்லை என்பதைக் காட்ட அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறானோ? நிலாவைத் தலையிலே சூடியிருக்கிறானே! அது அதற்காகத்தானோ? ‘இந்த நிலவொளியில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அவன் சொல்லாமல் சொல்கிறானோ?

இந்தக் கேள்வியைக் காரைக்காலம்மையார் இறைவனேயே கேட்கிறார்.

இறைவன் திருமேனி முழுவதும் வெள்ளைப் பொடியாகிய திருநீற்றைப் பூசியிருக்கிறான். அப்பழுக்கில்லாத சுத்த வெள்ளை நிறமாகத் தோன்றுகிறான். அத்தகையவனுக்கு இந்தப் பழியா? "வெள்ளையான நிறத்தை உடைய எம்பெருமானே! எனக்கு ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும்” என்று தொடங்குகிறார்.

சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய்.

“இவ்வாறு கபாலத்தில் பிச்சையாக உணவை ஏற்பது வடுவென்று பிறர் சொல்லவும் அது வடுவென்று நீ நினைக்கிறாயா? அப்படியானால் இந்த நிலாவை ஏன் தலையில் சூடியிருக்கிறாய்? மற்றவர்கள் நீ இவ்வாறு செய்வதை இழிவாகக் கருதிப் புறங்கூறுவதைக் கேட்டுத்தானோ அப்படிச் சூடியிருக்கிறாய்?”

வடு அன்று எனக்கருதி நீ மதித்தி ஆயின்

நீ இது வடு அன்று என மதிக்கலாம். ஆனால் உலகம் கூறும் பழிச் சொல்லைக் கேட்டு அதை மாற்ற எண்ணினாயோ?”

படுவெண் புலால் தலையினுள் ஊண்புறம் பேசக்கேட்டோ நிலாத் தலையில் சூடுவாய் நீ?

நா一24