பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

அருளை முற்றும் பெறாமல் சோதனைகளுக்குள் அகப்படும் போது, "ஐயோ! அவன் அருள் கிடைக்கவில்லையே' என்று ஏங்குவார்கள்.

இறைவனுக்கு ஆளாகிய பிறகும், இறைவன் அருளை முற்றப் பெற்றவர்களைப் போல் நாம் ஆகவில்லையே என்ற தாபம் மாணிக்கவாசகருக்கு இருந்தது.

“செழுக்கமலத் திரளனநின்
சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன்
போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன்
உடையாய்நின் அடைக்கலமே”

என்று புலம்புகிறார்.

இதே அநுபவத்தை நாயக நாயகி பாவத்தில் இராமலிங்க வள்ளலார் சொல்கிறார். அவன் என்னை அறியாத இளம்பருவத்தில் தானே வலியவந்து மகிழ்ந்து எனக்கு மாலையிட்டான். மறுபடியும் வந்து பார்க்கவில்லை, எந்த மாயச் சிறுக்கி மந்திரம் போட்டாளோ? என்கிறார்.

“சித்தமணி அம்பலத்தான்
என்பிராண நாதன்
சிவபெருமான் எம்பெருமான்
செல்வநட ராஜன்
வாய்த்தஎனை அறியாத
இளம்பருவந் தனிலே
மகிழ்ந்துவந்து மாலையிட்டான்
மறித்துமுகம் பாரான்