பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

காரைக்கால் அம்மையார் பாடல் இந்த உபாயத்தை நமக்குக் கற்பிக்கிறது.

காலையே போன்றிலங்கும் மேனி, கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு, மாலையின்
தாங்குருவம் போலும் சடைக்கற்றை மற்று அவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

[சிவபெருமானாகிய அவனுக்கு உதய வேளையாகிய காலை நேரத்தைப் போலச் சிவப்பாகத் திருமேனி விளங்கும்; கடும் பகலாகிய நண்பகல் வேளையைப் போல அவன் திருமேனியில் அணிந்த வெண்மையான திருநீறு விளங்கும்; மாலை நேரத்தில் வானம் தாங்கும் சிறப்புஉருவம் போல அவன் சடையின் தொகுதி தோன்றும்; மிக்க இருளைப் போல அவனுடைய நீலகண்டம் தோன்றும்.

அவற் என்பதை ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். அவன் என்பது சிவபெருமானைச் கட்டியது: உலகறி சுட்டு. கடும் பகல்-நடுப்பகல். வேலை—வேளல் கடும் பகலின் வேலை-கடுபகலாகிய வேளை; இன: வேண்டா வழிச் சாரியை. மாலையின் உரு, தாங்கு உருமு, மற்று; அசை. வீங்கு-மிக்க.]

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 65-ஆவது பாடல்.