பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71. எரியில் ஆடும் இடம்

இறைவன் தேசுமிக்க திருவுருவத்தை யுடையவன். அக்கினி மலையாக நின்றவன். மிக்க வெப்பமுடைய பொருளின் முன் சிறிது வெப்பமுடைய பொருள் தண்ணியதாகத் தோன்றும். பேரொளியின் முன் விளக்கின் சிறு சுடரொளி மங்கித் தோற்றம் அளிப்பதுபோல அமையும். துன்பங்களிலும் அப்படி ஒரு நிலை உண்டு. பெரிய துயரம் வந்து விட்டால் சிறிய துயரங்களின் கடுமை தோன்றாது. ‘வாளேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல’ என்ற பழமொழி ஒன்று உண்டு. தேள் கொட்டிய கை வெட்டுப்பட்டால் தேளின் விடம் தெரியாது.

இறைவன் ஆடும் நடனங்களில் ஒன்று அக்கினி நடனம். அவன் தீயில் நின்று நடனமாடுவான். அவனுக்கு அது குளிர்ந்த நீராக இருக்கும். அவனை அனலன் என்று தக்கயாகப்பரணியில் ஒட்டக்கூத்தர் கூறுவார். எரிபாய்ந்து ஆடும் எம்பெருமானைக் காரைக்கால் அம்மையார் நினைக்கிறார்.

‘எம்பெருமானே, நீ நள்ளிரவில் தீயில் ஆடுகிறாயே; அது எந்த இடம்? அதை எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்கிறார். குழந்தை ஆவலுடன் தன் தந்தையைக் கேட்பது போலக் கேட்கிறார். ‘எந்தாய்!’ என்றே விளித்து அந்தக் கேள்வியை விடுக்கிறார்.

‘என் தந்தையே, எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கிறது. என்று தொடங்குகிறார். அன்பர்கள் ஆசையை அறுத்தவர்கள். உலகியற் பொருளை நுகர வேண்டுமென்றும், அவற்றைத் தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்

நா—28