பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438

‘இடம் காட்டுதியோ’ என்று முடியும்.

இறைவன் ஞான ஒளி படரும் இடத்தில் மாசு போக்கிக் கொழுந்து விடும் ஞானாக்கினியிடையே ஆனந்த நடனம் ஆடுகிறான். எந்த உள்ளம் மாசு மருவற்று ஞானக் கனல் கொழுந்துவிடும் இடமாக இருக்கிறதோ அங்கே அவன் தன் அருளைச் செலுத்தி ஆனந்த நடனம் ஆடுவான். இந்தக் கருத்துக்களெல்லாம் குறிப்பாகப் புலப்படும்படி இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 70-ஆவது பாடல்.