பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78. அறிந்து ஆடும்!


தமிழ்நாட்டில் இறைவன் சிறப்பான நடனத்தைச் செய்தருளும் சபைகள் ஐந்து உண்டு. அவற்றைப் பஞ்ச சபைகள் என்று சொல்வார்கள். திருவாலங்காட்டில் இறைவன் ஊர்த்துவ தாண்டவம் புரியும் இரத்தின சபையும், சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் கனக சபையும், மதுரையில் கால் மாறியாடும் வெள்ளியம்பலமும், திருநெல்வேலியில் நடனமிடும் தாமிர சபையும், திருக்குற்றாலத்தில் திருக்கூத்தாடும் சித்திர சபையும் இருக்கின்றன. இவற்றில் வடக்கே தொண்டை நாட்டில் உள்ள திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவத் தலம். அவனுடைய நடனத்தைத் தரிசித்துக் கொண்டு என்றும் காரைக்காலம்மையார் அங்கே இருக்கிறார்.

“கூடுமா றருள்கொ டுத்துக்
குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்டு
ஆனந்தம் சேர்ந்துஎப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
பரவுவார் பற்றாய் நின்றான்.”


“மடுத்த புனல் வேணியினார்
அம்மைஎன மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக்
குலவியதாண் டவத்தில் அவர்