பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

குழந்தையை யாராவது அடித்தால், அம்மா என்று தான் அழும். அம்மாவே அடித்தாலும், அம்மா!' என்று தான் அழும், அப்படியே பக்தர்களுக்கு உலகிலுள்ளவர்களால் துயரம் வந்தாலும் வேறு வகையாகத் துன்பம் வந்தாலும் இறைவனையே நோக்கி விண்ணப்பிப்பார்கள்; நைந்து புலம்பு வார்கள்; இரங்குவார்கள் எம் தந்தையே! என முறையிடு வார்கள். அந்த முறையீட்டைக் கேட்டு ஆண்டவன், சும்மா இருப்பானா? எவ்வளவு கொடிய துயரமானலும் அதை உடனே மாற்றிவிடுவான்.

"இறைவனே, எந்தாய் என இரங்கும்
எங்கள்மேல் வெந்துயரம் வந்தால், அதுமாற்றுவான்."

இறைவனே நோக்கி, ‘எம் தந்தையே, அப்பா, பரம பிதாவே’ என்று நைந்து உருகி இரங்குபவர்கள் அன்பர்கள். அவர்கள் தமக்குப் பற்றுக்கோடாக வேறு யாரையும் பற்றுவதில்லை. இறைவன் ஒருவனே புகலிடம் என்று புகுவார்கள். அது அவர்களுக்கு இயல்பு. அன்பின் நிலை அது.

அவர்கள் குரலைக் கேட்டு, யாருக்கு வந்த விருந்தோ இது என்று புறக்கணியாமல் உடனே அவர்களுடைய துயத்தை மாற்றுகிற கருணையாளன் இறைவன். அவன் ஒருவன்தான் அப்படிச் செய்ய முடியும்.

பொதுவாக, உயிர்க்கூட்டங்களின் வினைக்கு ஈடாக அவர்களைத் தோற்றுவித்தும் உடம்பினின்றும் பிரித்தும் செயல் புரியும் இறைவன், சிறப்பாகத் தன்னையன்றி வேறு யாரையும் புகலாக அடையாத அன்பர்களைத் துன்பத்தினின்றும் விடுவித்து, நலம் அருளுவான் என்ற கருத்தை இந்தப் பாட்டில் காரைக்காலம்மையார் வெளியிடுகிறார்.

"இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான், தோற்றி
இறைவனே ஈண்(டு) இறக்கம செய்வான்—இறைவனே