பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

இவ்வாறு சொல்வதற்குக் காரணம் என்ன? தவத்தினால் உண்டான விளைவைக் காண்கிறார். முன்னைப் பிறப்பில் செய்த தவம் அவருக்கு நினைவு இராது. போன பிறவிகளைப்பற்றிய நினைவு நமக்கு இருப்பதில்லையே! ஆனாலும் இப்போது உள்ள நிலையைக் காணும்போது, இதற்குக் காரணமாக முன்னைப் பிறப்பில் தவம் செய்திருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. வித்தை நடும்போது பாராவிட்டாலும் விளைந்த மரத்தைப் பார்க்கும்போது, வித்தை நட்டு நீர் விட்டுப் பல ஆண்டுகள் அதை வளர்த்திருக்க வேண்டும்’ என்று உய்த்துணர முடிகிறது அல்லவா?

அப்படி என்றால், தவத்தினால் உண்டான விளைவு என்ன "அந்த விளைவு தவத்தினால்தான் உண்டாயிருக்க வேண்டும்? என்றுதான் சொல்ல வேண்டுமா?

என்ன விளைந்தது? என்பதைத் தெரிந்து கொண்டால் அதன் அருமைப்பாடு தெரியும்.

“என் நெஞ்சம் நன்னெஞ்சம்.”

“என்னுடைய நெஞ்சம் நல்ல நெஞ்சமாக இருக்கிறது; அதனால் யான் முன்னைப் பிறப்பில் நல்ல தவம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்கிறார்.

நெஞ்சம் அல்லது மனம் மூன்று குணங்களைக் கொண்டது. சாத்துவிகம், ராஜசம், தாமசம் என்பன அவை. இந்த மூன்றிலும் தாமசமே எல்லோரிடத்திலும் ஓங்கியிருக்கிறது. அதனால் மேலும் மேலும் பாவங்களைப் புரிந்து பாசத்துள் ஆழும் நிலை உண்டாகிறது. ராஜசமோ மேலும் மேலும் ஓடியாடி விவகாரங்களை மிகுதிப்படுத்திக் கொள்ளும் நிலையை உண்டாக்குகிறது. சத்துவம் தலைப்பட்டால்தான் உண்மை உணர்வும் மெய்ஞ்ஞானமும் உண்டாகும்.

மனத்தில் சத்துவகுணம் மிகுதி ஆக ஆக ஏனைய இரண்டு குணங்களும் மெல்ல மெல்லக் குறைந்து தேயும். சத்துவகுண