பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடு பணி

மஞ்சள் கலந்த வெண் பனித் துளிகளால் போர்த்தப் பட்டிருக்கிறது ககரம். அதை ஈரப்புகைக்கு - அப்படி ஒரு பொருள் இருப்பது சாத்தியமானல் - ஒப்பிடலாம். நமக்கு முன்னே ஐந்தடி தாரத்துக்கு அப்பால் பணித் துளிகள் மிகவும் கெருக்கமாகக் காணப்படுகின்றன. அந்த இடத்தில் காற்று என்பது இருக்கவே முடியாது; அங் கிருந்த காற்றை அழுக்கு மிகுந்த இந்தப் புகை விழுங்கி இருக்க வேண்டும் என்று, காம் எண்ணக் கூடிய அளவுக்கு அது கனமாக இருக்கிறது. ஆயினும், வேறு எங்தப் பனியினூடும் நடந்து செல்வது போலவே காம் அதனுள்ளும் கடக்கிருேம். மூச்சு விடுவதற்குக் கஷ்டமாக இருக்கிறது: கண்கள் சக்தியற்றுப் போகின்றன என்பது தவிர வேறு வித்தியாசம் இல்லை. விஸ்தாரமான நகரத் தின் ஒசைகள் எல்லாம் மூடி முக்காடு போடப்பட்டு, வர்ண மிழந்து, மந்தமான இரைச்சலாகி விசித்திரமாய் அமுங்கி யிருக்கின்றன. மோட்டார் ஹாரன்களின் சப்தத்தை அபூர்வமாகத்தான் கேட்கிருேம். அதனினும் அபூர்வ மாகத்தான் மனிதக் குரல்களைக் கேட்க முடிகிறது. அவற் றைக் கேட்கலாம் என்று நாம் எதிர்பார்த்துக் கொண் டிருப்பதல்ைதான் அவை கூட நம் காதில் விழுகின்றன