பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடு பணி 2?

வேகமாக இடித்து விடுகிருர்கள். அவன் கூச்சல் போடு கிருன். அவ் இரண்டு கிழவிகளும், விசையினுல் இயங்கும் பொம்மைகள் மாதிரி, ஒரே சமயத்தில் தங்கள் கைகளே மேலே தூக்குகிருர்கள். அதே தன்மையில், பயந்து நடுங் கிக் கொண்டே, வியப்புச் சொற்களைத் தவிர வேறு எதுவும் இல்லாத வாக்கியங்களே உதிர்க்கிருர்கள்.

வீடுகளின் சுவர்களும் கடைகளின் ஜன்னல்களும் ஈரக் கசிவின் சிறு சிறு துளிகளால் மூடப்பட்டிருக்கின் றன. கரைந்து கொண்டிருக்கும் அழுக்கான பனிக் கட்டி யினல் செய்யப்பட்டது போல், ஒவ்வொன்றும் இளகி யிருக்கிறது. நமது கற்பனே விபரீதமான போக்கில் திரும்பு கிறது: வான சாஸ்திரிகள் எதிர்பாராத விதத்திலே, சூரியன் திடீரென்று வெடித்து, உயிரற்ற சந்திரனே உருக்கி விட்டது. அந்த இளகி ஓடும் பொருள். புதிய பாலின் தட்ப கிலேக்குக் குளிர்ந்து, கீழே வடிந்து, அழுத் தும் புகை மயமான ஈரத்தினல் பூமியை மூடி, திகைப் பூட்டும் ஈர அழிவு கோய் ஒன்றை அதற்கும் தொற்ற வைத்து விட்டது. கோடிக் கணக்கான மக்கள் உள்ள இந்த மாபெரும் நகரமும் உருகத் தொடங்கி விட்டது: சீக்கிரமே அதனுடைய செங்கல், கண்ணுடி, உலோகம், மரம் எல்லாம் கிசப்தமாக உருகிக் கலங்கலான நீரோடை களாகப் பெருகி ஓடும். அவை கூட ஆவியாக மாறி, கரை ஒடிய மஞ்சள் கிற மூடுபனியாகப் பரவிவிடும் ......

ஆனல், இந்த நகரத்தின் மக்கள் கிளர்ச்சியுற்ற கற்பனையின் கோரமான விளையாட்டை எளிதில் அகற்றி விடுகிருர்கள். நம்மை முதன் முதலாக கிதானப் படுத்துகிற வர்கள் போலீஸ்காரர்கள் தான். ஒரே பொருளினல் வார்த்தெடுக்கப்பட்ட மகத்தான பிறவிகள் இவர்கள். இயங்திர ரீதியில், அமைதியோடும், நிச்சய உணர்வோடும்