பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதும், கலா சாரத்தை நாசப்படுத்துவதுமான இத்தகைய புத்தியற்ற செயலில் ஈடுபட்டிருக்கும் வேளையிலேயே, தங்கள் தேகத் திலும் நரம்புகளிலும் எரிச்சல் மூட்டுகிற - அல்லது தங்கள் இதயங்களையும் மனசையும் கலக்குகிற - ஒவ்வொரு விஷ யத்தையும் புத்தி பூர்வமாக ஆராயும் ஆற்றலேப் பெற்றி ருக்கிருர்கள் அவர்கள். அவர்கள் கடவுளேப் பிரார்த்திக் கிருர்கள்; உண்மையாகவே பிரார்த்திக்கிருர்கள்; இந்தப் புத்தகத்தில் உள்ள ஒரு கதாபாத்திரம் குறிப்பிடுவது போல், “முட்டாள் தனமான ஒருமைப் பாட்டுடன்' பிரார்த்திக்கிருர்கள். அதன் பிறகு தங்களைத் தாங்களே வதை செய்யும் வெறி வேலையில் மீண்டும் முனைகிருர்கள், அதே ரக "முட்டாள் தனமான ஒருமைப்பாட்டுடன்' தான். இழிவான, ரத்தமயமான, தங்களுடைய யுத்த வேலையில் கூட "கடவுள் நம் பங்கில் இருக்கிருர்’ என்று உண்மையாகவே கம்புகிற ஜெர்மானியர்கள், பிரெஞ்சுக் காரர்கள் ஆகியோரின் இவ்வித பிரார்த்தனேகள் பற்றிய வர்ணனையை இப்புத்தகத்தின் 487-88 பக்கங்களில் வாசகர் காணலாம்.

ஆயினும் அவர்களே அப்புறம் சொல்கிருர்கள், "கடவுள் நமக்காக இரண்டு துரும்புகளைக்கூடத் தருவ தில்லை' என்று. இவ் வீரர்களும், மதாபிமானத்திற்காக உயிரைக் கொடுப்பவர்களும், சகோதரவதை புரிகிறவர் களும், "தங்களோடு தான் இருக்கிருர் என்று ஒவ்வொரு வரையும் நம்பும்படி செய்து விடுகிருரே இந்தக் கடவுள்; இவர் என்னதான் எண்ணிக்கொண்டிருக்கிருர்?' என்று தங்களேயே கேட்டுக்கொள்கிரு.ர்கள்.

இம் மனிதர்கள், எளிமையான, குழங்தைகளின் கபடற்ற தன்மையோடு-ஆயினும் பொதுவாகவே முட் டாள் தனமான ஒருமைப்பாட்டுடன் -எண்ணுகிருர்கள்,