உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 87

உலக நாடுகள் எல்லாம் பாராட்டின் சில நாடுகள் அழுக் காறுற்றன! மற்றும் சில நாடுகள் மார்க்ஸ் நடந்த அடி" சுவடுக்ளிலே கால் பதித்து நடந்தன!

சோசலிசம் பூக்கள் டிர்ந்த பூந்தோட்டிமாக ருஷ்யா மணம் வீசுவதைக் கண்ட பிறநாட்டுத் தலைவர்கள். அறிஞர்கள், அரசியல் வாதிகள், கலைஞர்கள், பொருளா தார மேதைகள், அறிவியல் வித்தகர்கள், கத்துவஞானி கள், போன்றவர்கள், ருஷ்சப் பூந்தோட்டத்திலே உலா வந்து அந்த பூக்களின் நாற்றத்திலே மூச்சுத் திணறி வந்தார்கள் அவர்களிலே ஒருவர் தந்தை பெரியார்.

தமிழகத்தின் சாக்ரடீஸ் என்று போற்றப்படும் தந்தை பெரியார், தனது சொந்த செலவிலே, உலக நாடுகள் சுற்றுப் பயணத்தை 1931-ம் ஆண்டு முடிவிலிருந்து1932-ம்ஆண்டின் முடிவுவ்ரை, ஏறக்குறைய பதினொன்று மாதம் சென்று திரும்பினார்.

துருக்கி, எகிப்து, கிரீஸ், இரஷ்சியா, இங்கிலாந்து, வேல்சு, ஸ்பெயின், செர்மன் போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ், இலங்கை முதலிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பதினொன்று மாதம் கழித்து இந்தியா வந்தார்!

சோவியத் இரஷ்சியாவுக்குச் சென்ற தந்தை பெரியார்: அங்கே ஸ்டாலின் ஆட்சியில் கார்ல் மார்க்ஸ் ஆட்சி நடப்ய பதையும், வீழ்ச்சியுற்ற முதலாளித்துவத்தால் அந்த் நாடு எழுச்சி பெற்று வர்க்கப் பேத் மற்ற சமுதா:ம் அமைத்து வளமாக வாழ்வதையும், அந்த நாட்டு மக்களின் கடவுள் உணர்வுகளற்ற மதச்சிர் திருத்தத்தையும் பெரியார் மகிழ்ச் சியாகச் சுற்றிப்பு:ார்த்து விட்டு தாயகம் வந்தார்!