பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச கவிஞர்-குலசேகராழ்வார் ###

தேனுர்பூஞ் சோலேத் திருவேங் கடச்சுனையில் மீனுய்ப் பிறக்கும் விதியுடையெ னுவேனே."

(பெருமாள் திருமொழி, 4:2)

இப்பாட்டால் ஆழ்வார் தாம் அனுபவித்து இன் புற்ற அரசபோகத்தையும் வெறுத்து வேங்கடவன் தண்ணருளையே விரும்பிய பான்மை விளங்கும்.

ஒண்பவள வேலை யுலவு தண் பாற்கடலுள் கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்குப் பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச் செண்பகமாய் திற்கும் திருவுடையெ னுவேனே."

(பெருமாள் திருமொழி, 4:4) இப்பாடல் குலசேகரரின் கவியுள்ளத்திற்கும் மலரி னும் மெல்லிய கலேயுள்ளத்திற்கும் சிறந்ததொரு 守厂Gö广Jy。

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே வேங்கடவா! நின்கோயிலின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்குக் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே! - (பெருமாள் திருமொழி, 4:9) இப்பாடலால் குலசேகரரின் பத்தி உள்ளத்தின் எல்லே புலகுைம்.

வேங்கடத்தில் கோயில் கொண்ட பெருமானின் பவளவாயைக் காண அவன் திருக்கோயில் படியா யேனும் கிடக்க ஆழ்வார் கொண்ட அவா அடியவர் உள்ளத்தையெல்லாம் உருக்கியது. அதனுலன்ருே, இன்றுங்கூடத் திருமால் கோயிலிலுள்ள வாயிற்படி குலசேகரன் படி என்று போற்றப்படுகின்றது?