பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#12 காற்றிலே மிதந்தவை

தீங்கால் அந்நகரமும் அழிந்தது. இது போன்ற உண்மைக் கருத்துக்களை அடிகள் தம் காப்பியத் தில் அழகாகக் கூறியுள்ளார்கள். பொதுவாக அரசியல் திறத்தினைத் தமிழில் தீட்டிய பெருமை இளங்கோ அடிகளுக்கே உரியது. அக்காப்பியத் தில் காணும் பொதுமை கண்ட தமிழை நண்பர் திரு. சஞ்சீவி அவர்கள் ஆராய்ச்சித் திறனும், தமிழ் அழகும் கிறைய எடுத்துக் காட்டுவார்கள்.

- 豪 - 蜂 潑

திரு. சஞ்சீவி அவர்கள் எனது அரிய நண்பரும் திருச்சிராப்பள்ளிச் சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமாயிருந்த திரு. நடேச முதலியார் அவர்களுடைய புதல்வர் என்பதைக் கூற மகிழ்ச்சி ய டைகிறேன். திரு. சஞ்சீவி அவர்களுடைய ஆராய்ச்சித் திறனேயும் அரிய பேச்சினையும் இவர் களுடைய தந்தையார் கேட்டு எப்படி மகிழ்வாரோ அப்படியே நானும் நீங்களும் கேட்டு மகிழ்வோம். எம். ஏ. பட்டம் பெற்றவர்; பேச்சிலும் எழுத்திலும் பல பரிசுகள் பெற்றவர்; பல நூல்கள் எழுதித் தமிழ் அன்னேயைச் சிறப்பித்தவர். இவர் இப் போது காஞ்சிக் கல்லூரியில் பேராசிரியராய் விளங்குகின்ருர். எதிர் காலத்தில் இவர் இன்னும் நெடும்புகழுக்குரியவர் ஆவார். இவர் தம் ஆய்வுத் திறன் அமைந்த சிலம்புச் செல்வத்திலிருந்து காட் டும் அரிய மணிகளாம் பொதுமை கண்ட தமிழின் .ெ பா ன் ைன பேச்சை இப்போது கேட்கப் போகிருேம்.

  • 嶽 - 蠍