பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 23

னுக்குயிர் கோடி கொடுத்த கொள்கை படைத்த வீரர்கள் செய்த புரட்சி, பாரதியாரின் ஆவேசத் தீயை மூட்டியது. மேலும், அத் தீ யி னின் அறும் தெறித்து விழுந்த தீச்சுடர்களே பாரதியாரின் கட்டுரைகள், கவிதைகள், காவியங்கள்.

சிவாஜியின் வீரத்தை_திலகரின் புகழைகாந்தியாரின் புரட்சியை-லஜபதியின் துயரைசிதம்பரனரின் சீ ற் ற த்தை எல்லாம் தித்திக்கும் தமிழாற்பாடித் தேசாபிமானத் தீயை நாட்டு மக்கள் கெஞ்சிலெல்லாம் பற்றி எரியச்செய்தார் பாரதியார்.

சுதந்தர வெறி கொண்ட பாரதியாரின் பாடல் களில் சோகம், சீற்றம், சிந்தனே, காதல், கருணே, கடமை-அக்தனேயும் உண்டு.

தண்ணீர்விட் டோவளர்த்தோம்?

சர்வேசா? இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ;

கருகத் திருவுளமோ? :

என்று கடவுளே நோக்கிக் கதறியழும் பாரதியாரின் கவிதையைப் படிக்கும் போது நெஞ்சம் உருகா தார் யார்?

"கூட்டங் கூடிவந் தேமாத மென்று

கோஷித்தாய்-எமைத்-துவித்தாய்! ஒட்டம் நாங்க ளெடுக்கவென்றேகப்பல் ஒட்டினுய்-பொருள்-ஈட்டினுய்! என்ற வெள்ளேயன் வீம்பிற்கு,

1. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 46