பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 35

சமுதாய விடுதலையை--கலாசார விடுதலையை விரும் பியது போன்றே ஆன்ம விடுதலையிலும் பெருங் காதல் கொண்டது. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போல, என்று பாடிய பாரதியாருக்கு உலகெலாம் ஒன்ருகக் காண்பதே காட்சி, என்ற அந்த மெய்ஞ்ஞானக் காட்சியிலேஆன்ம விடுதலையிலேதான்-எவ்வளவு ஆனந்தம் ! காக்கை, குருவி யெங்கள் ஜாதி ; நீள்

கடலு மலேயு மெங்கள் கூட்டம்; நோக்குத் திசையெலாம் நாமன்றி வேறில்லை! நோக்கநோக் கக்கனி யாட்டம்! " என்று இன்பக் குரவையாடுகிருர் ஞானக் கவிஞர் பாரதியார்.

இவ்வாறு தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உயிரளிக்கும் சுகந்தர உணர்ச்சியின் ஒளி ஒரொரு கால் மங்கிப்போக, முக்கிய காரணங்கள் இரண்டே யாகும். ஒன்று, அச்சம்; மற்றென்று, அறியாமை, அச்சமும் அறியா மையும் ஒழிந்தாலன்றி எந்த விடுதலையையும் எய்த முடியாது என்பதைப் பாரதி யார் நன்கறிவார். அதனுலேதான்,

  • பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா ! மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!' என்று பச்சிளங்குழந்தைக்கும் அச்சம் கூடா தென்று அழுத்தம் திருத்தமாக உபதேசிக்கிரு.ர்.

பாரதி நூல்கள் (அ.வெ) பக் 219 2 ruš. 250 .