பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8 காற்றிலே மிதந்தவை

யும், இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள் பாடிய குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதியும் அடியார் நெஞ்சிலும் நாவிலும் நடமாடும் சிறப்புடையனவாகும்.

காதல் ம ன மும் கடவுள் மணமும் கமழப் பட்டினத்தடிகளார் பாடிய திரு ஏகம்பமுடையார் திருவக்தாதி அருமையும் பெருமையும் வாய்ந்த தாகும.

இனி அந்தாதிச் சோலையில் அழகும் மணமும் சுவையும் உடையனவாய்ப் பழுத்து விளங்கும் கணக்கற்ற கவிதைக் கனிகளுள் சிலவற்றின் சுவையை மட்டும் இப்போது நுகர்வோம்:

முதலில் கவியரசர் கம்பர் பாடிய சரசுவதி அந்தாதியிலிருந்து இரு பாடல்களைப் பார்ப்போம்: மயிலே மடப்பிடி யேகொடி யேயின மான்பினேயே குயிலே பசுங்கிளி யேஅன்ன மேமனக் கூரிருட்கோர் வெயிலே நிலவெழு மேனியின் னேயினி வேறு தவம் பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. இப்பாடல் பாதங்களே என்ற இறுதிச் சொல் லோடு மு டிங் த து அல்லவா? அடுத்த பாடல் ஆரம்பிப்பதைப் பாருங்கள்:

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ் சீதாம் புயத்தில் இருப்பான் இருப்பனன் சிந்தையுள்ளே ஏதாம் புவியிற் பெறலசி தாவ தெனக்கினியே! இனி காரைக்கால் அம்மையார் பாடிய அற் புதத் திருவந்தாதியிலிருந்து இரு பாடல்களே க்

கேளுங்கள்: -