பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காற்றிலே மிதந்தவை

நிறைந்த திருநாடாய் இன்று போல ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னும் கி க ழ் ங் த காட்சியினைப் பொருநராற்றுப்படை சொற்சித்திரமாக்கிக் காட்டுகிறது. கோடையின் வெம்மையால் மரங்களும் செடிகளும் கொடிகளும் மயங்கிக் கருகினலும், வான்முகில் கடல்நீரை முகக்க மறந்தாலும், மழை காணுமையால் மன்பதைக்குப் பெரியதொரு பஞ்சம் விளையினும், காவிரி தன் வளம் சாத்தலில் ஒருநாளும் தவருது. அவ்வாறு காவிரி சுரக்கும் வளத்தால் சோழநாட் டில் பயிர் வளம் சிறந்து பொலிகிறது. உழவர்கள் வித்தி விளைத்த பயிரை விளைவேற்றி அறுவடை செய்து நெல் மணியை மலைமலையாய்க் குவிக்கின்ருர் கள். அவர்களுடைய மனேகளிலுள்ள நெற்குதிர் களிலெல்லாம் இடமே இல்லாதபடி நெல் மணிகள் கிரம்பிக் கிடக்கின்றன. இவ்வாறு சோழவள நாட்டில் அன்னே காவிரியின் திருவருளால் வேலி ஒன்று ஆயிரம் கலமாக விளகிறது. காவிரிசூழ் நாட்டின் பெ ரு வ ள க் ைத இவ்வாறு போற்று கின்ருர் சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவ ராகிய முடத்தாமக் கண்ணியார்.

காவிரி' என்ற பெயரே அப்பெயர் கொண்ட ஆற்றின் பெருமையை விளக்கும். சிறந்ததோர் ஆற்றின் பயனே அதன் கரைகளிலும் அங்கு வாழும் மக்களின் வாழ் வி லு ம ன் ருே காணவேண்டும்? வளமான சோலைகளைப் போகும் வழியெல்லாம் தன் இருகரைகளிலும் விரித்துச்செல்லும் வீறு பெற்ற தாலன்ருே பொன்னி நதியைக் காவிரி என்று போற் றினர் கற்ருேரும் மற்ருேரும்? இவ்