112 காலந்தோறும் தமிழகம் மூன்றாம் இராசராசன் காலத்தில், மகததாட்டு வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டுக்காடவர் குலத்துக் கோப்பெருஞ்சிங்கன் போலும், தண்டத் தலைவர்கள் சோழப்பேரரசுக்கு விரோதமாகத் தமக் குள்ளே உடன்படிக்கை செய்து கொண்டதும், பேரரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்ததும், பாண்டியன் பால் தோற்றுப் புகலிடம்தேடி, வடநாட்டு போசள அரசனை நாடிச் செல்லும் மூன்றாம் இராசராசனைச், சோழர்படை முதலியாகப் பண்டு பணி புரிந்த கோப்பெருஞ்சிங்கன் சிறை பிடித்துச் சேந்த மங்கலம் சிறையில் அடைத்ததும் ஆகிய நிகழ்ச்சிகள், சோனாட்டின் உள்நாட்டுக் கலவரங்களாய்ச் சோழப்பேரரசின் அழிவிற்கு அடிகோலுவன ஆயின. வலுவிழந்த சோழர் படை உள்நாட்டில் எழுந்த இவை போலும் கிளர்ச்சிகளையும், அடக்கி அழிக்க முடியாத அளவு சோழர் படை வலுவிழந்து போனதும், சோழப் பேரரசின் அழிவிற்கு ஒரு காரணமாம். கங்கைக்கரை அரசுகளையும் அழிக்க வல்ல தரைப்படையை யும், கடாரமும், ஈழமும் வெல்லவல்ல கடற்படையும் கொண் டிருந்த சோழர்படை மூன்றாம் இராசராசன் காலத்தில் உள்நாட்டுக் கலவரத்தை அடக்கவும், பிறநாட்டுப் படைத் துணை தேடுமளவு சீரழிந்து விட்டது: மேலே கூறிய அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்தபோது, அவற்றை அடக்க வந்த போசள நாட்டுப் படை, சோணாட்டின் காவல் கருதி: சோணாட்டிலேயே இடமும் பிடித்துக் கொண்டது: தன் நாட்டில், அந்நிய நாட்டுப்படை கால்கொள்ளுமளவு சோழர் படை சீரழிந்து போய்விட்டது; சோழநாட்டின் காவல் கருதி வந்த போசளர், சில நாள் கழிந்த பின்னர், சோழ மன்னனையே எதிர்த்துப் போராடிச் சோணாட்டிற்கு உள்ளாகவே தனி அரசு அமைத்து ஆளவும் தலைப்பட்டு விட்டனர்; திருச்சி மாவட்டத்தில் திருச்சி, திருவரங்கம்
பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/111
தோற்றம்