கா. கோவிந்தனார் . 117 முதலாம் இராசேந்திரன் இராசராசனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற அவன் மகன் முதலாம் இராசேந்திரன், பாண்டிய நாட்டின் மீது சோழ அரசுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவான் வேண்டி, மதுரை மாநகரில் ஓர் அரண்மனை அமைத்து, ஆங்குத் தன் மகன் சுந்தரசோழனுக்குச், சடையவர்மன் சுத்தரசோழபாண்டியன் எனும் பட்டத்துடன் முடிசூட்டிப் பாண்டிய நாட்டு ஆட்சிப் பொறுப்பை அவன்பால் ஒப்படைத்தான். இவ்வாறு பாண்டிய நாட்டைச் சுந்தர சோழபாண்டியன் ஆட்சிபுரிந்து வருங்காலை தம் நாட்டைக் கைப்பற்றித் தாமே ஆளவேண்டும் என்ற எண்ணம் வலுப் பெற்ற பாண்டிய மன்னர்களாகிய மானாபரணன், வீர கேரளன், சுந்தரபாண்டியன் என்ற மூவரும் ஒன்றுபட்டு, சுந்தரசோழ பாண்டியனுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந் தனர். அஃதறிந்த இராசேந்திரன், தன் மூத்த மகன் இராசா திராசனைப் பெரும் படையுடன் பாண்டி நாட்டிற்கு அனுப்பினான். இராசாதிராசனும், மானாபரணனையும், வீரகேரளனையும் வென்று, சுந்தரபாண்டியனைக் காடு புகுந்து ஒளியும் வண்ணம் துரத்திக் குழப்பத்தை அடக்கி மீண்டான். வீரராசேந்திரன் வீரராசேந்திரனும், தன் தந்தை வழியைப் பின்பற்றி, தன் மகன் கங்கைகொண்ட சோழன் என்பவனைப் பாண்டிய நாட்டில் அரசப் பிரதிநிதியாக அமர்த்தி, சோழ பாண்டியன் எனும் பெயர் சூட்டியிருந்தான். அக்காலைடி முதலாம் இராசேந்திரன் காலத்தில் நிகழ்ந்தது போலவே, பாண்டியர் வழிவந்த வீரகேசரி என்பான், தன் அரசுரிமை யைப் பெறுவான் வேண்டிச் சோழ பாண்டியனை எதிர்த் துக் குழப்பம் விளைவிக்க, வீரராசேந்திரன் பாண்டிய நாடு புகுந்து, வீரகேசரியைக் கொன்று அரசியல் கலவரத்தை அடக்கினான். :
பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/116
Appearance