பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 காலந்தோறும் தமிழகம் தேவனும், அவன் அமைச்சனும் அடுத்தடுத்து இறந்து விட்டனர். அது மக்கள் உள்ளத்தில் பிரிட்டோ பால் ஓர் அன்பு உணர்வையும், அவர் போதித்த சமயத்தின் பால் பற்றும் உண்டாக்கவே, மறவர் பலர் கிறித்துவராக முன் வந்தனர். கிறித்துவ சமயம், மறவர் நாட்டில் இவ்வாறு வேக மாகப் பரவிக் கொண்டிருக்கும் அதே காலத்தில், மதுரை மண்ணிலும் அது வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்தது: மங்கம்மாள், கிறித்துவப் பாதிரிமார்கள் பால் அன்போடும், பண்போடு'துடந்து கொண்டாள். தாம் பின்பற்றும் சமயத் திற்குத் தாம்'தலை வணங்குவது போலவே, பிற சமயம் களையும் மதித்து நடிக்க வேண்டும், என்ற தலையாய கொள்கை" உடையவராகிய மங்கம்மாள் காலத்தில் கிறித்துல் சமயம், தமிழகத்தில் சிறப்பான இடம் பெற்றுத் திகழ்ந்தது. - X