பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. தமிழகத்தின் பரப்பும் - பழமையும் "நீலத் திரைகடல் ஒரத்திலே நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை-வட மாலவன்குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு’ - எனப் பாரதியார் பாடிப் பரவுதற்கேற்ப, தமிழ்நாட்டிற்கு இவ்விருபதாம் நூற்றாண்டின் எல்லைகளாக விளங்கும் வேங்கடம்-குமரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் வட தென் எல்லைகளாகவும் நின்று காத்திருந்தன. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய னாரின் ஒரு சாலை மாணவராய் மாண்புற்று, அவர் தம். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பகர்ந்தருளி ஆசிரியர் பனம்பாரனார் அவர்களின் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்ற பாவில், அவ்விரு எல்லைகளே கூறப்பட்டுள்ளமை உணர்க. தொல்காப்யியர் காலத்துத் தமிழகம், இவ்வாறு வேங்கடம் குமரிகட்கு இடைப்பட்ட சிறு நாடாய்க் குறுகி காட்சி அளித்தது என்றாலும், அவர்க்குப் பலநூறு ஆண்டு களுக்கு முன்னர் அது, வெண்பனி தவழும் இமயப் பெரு மலையைவட எல்லையாகவும், தென்கடல் அலைமோதும் குமரிக் கோட்டினைத் தென் எல்லையாகவும் கொண்ட பெரு நிலப் பரப்பாகவே இருந்தது. கடைச் சங்ககாலப் பாண்டியருள் பழையோனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய புலவர் காரிகிழார் அவர்கள், தமிழகத்தின் எல்லை கூறுங்கால், இமயம் குமரிகளையே வடதென் எல்லைகளாகக் கூறி