பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 163 அந்த நாட்களில், பெண் தன் கணவனை முழுமனதோடு விரும்பித் தேர்ந்து, மணவாழ்வுக்கு உட்படுபவளாக இருந்திருக்க வேண்டும். வருண பேதங்கள், பெருமளவாக, மானுட சமுதாயத்தைக் கூறு போட்டிராத நாட்களில் நாகரிகமான இத்தகைய திருமணம் மட்டுமே வழக்கில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வருண பேதங்களும், வருக்க வேற்றுமைகளும் ஆழ்ந்த பிளவுகளாக மனித சமுதாயத்தைக் கூறு போடத் தொடங்கிய பிறகு, பெண் கட்டுப்படுத்தப்படுவது அவசியமாயிற்று. எனவே திருமண முறைகளிலும் பல்வேறு பாகுபாடுகள் வந்திசைந்தன. பல்வேறு மாறுதல்களைக் கற்பிக்க வேண்டியதும் அவசியமாயிற்று. ஏனெனில் ஏழு வயது சிறுமியை மணவாழ்வில் பந்தப்படுத்த வேண்டிய கட்டாயம் புகுந்தபிறகு, உள்ளார்ந்த மணம் கொண்டு மொழியும் மந்திரச் சடங்குகள் அவருக்கு எந்த விதமான கடமையுணர்வையும் மனதோடு அறிவுறுத்தாது. முதலில் தன்னைக் கட்டியவன் தனக்கு மேலானவன், சமமானவன் அல்ல; அவனே குரு, அவனே தெய்வம் என்ற உணர்வை அவள் உள்ளத்தில் அழியாப் பதிவாகப் பதிக்க வேண்டும். அந்த இளம் உள்ளத்தில் இந்தப் பதி தத்துவம், தன் உயிரினம் மேலான மதிப்புடையதாக ஏற்றம் பெற வேண்டும். ஒரு பெண் தனிமையில் இருப்பதும், சுதந்தரமாக வாழ்வதும் மிகவும் கேவலமான நிலை, சமுதாயம் ஒப்புக்கொள்ள முடியாத இழிநிலை என்ற அளவில், திருமணச் சடங்கு சமயம் சார்ந்து, முக்கியப்படுத்தப்படும்போது 'கணவன்’ என்ற பதவி அல்லது உயர் மதிப்பின் கெளரவமே, அவனுடைய உண்மையான தகுதிகளைக் காட்டிலும் அவளுக்கு 'மகத்தானதாகக் கற்பிக்கப்பட வேண்டும். இவ்வாறான பயன்களைக் குறிப்பாக்கித் திருமணச் சடங்குள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன.