பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 171 “யாக்ளு, வாயுக்கு ஆதாரம் எது?” “கார்க்கி, இது ஆகாயமாகிய வெற்றிடத்தால் நிலை கொண்டிருக்கிறது.” "அப்படியானால், ஆகாயத்துக்கு மூலம் யாது?” “கார்க்கி ! இது கந்தருவர்களின் பிரதேசத்தில் நிலைபெற்றது.” “யாக்ளு! இந்தப் பிரதேசம் எங்கிருக்கிறது?” “...இது சூரிய மண்டலத்தில் நிலைபெறுகிறது.” “யாக்ளு, சூரிய மண்டலம் எங்கே நிலைபெறுகிறது?” “கார்க்கி, இது சந்திர மண்டலத்தில் நிலைபெறுகிறது.” “அது எங்கே இருக்கிறது?” “அது நட்சத்திர மண்டலத்தில் நிலைகொண்டது.” “அது எங்கே நிலைபெறுகிறது?” “அது கடவுளர்களின் பிரதேசத்தில்...” ‘கடவுளர்களின் பிரதேசம்?” “இந்திரன் உலகில்.” “இந்திர உலகம் எங்கே இருக்கிறது?” “பிரஜாபதியின் உலகில் உள்ளது.” “பிரஜாபதியின் பிரதேசம் எங்கே உள்ளது?” “அது பிரும்ம உலகில் இருக்கிறது, கார்க்கி!” “பிரும்ம உலகம் எங்கு உள்ளது யர்க்ளு?” “இனிமேல் கேட்காதே! எதை நீ கேட்கக்கூடாதோ அதைக் கேட்கிறாய்; உன் வினாக்களை இத்தடன் நிறுத்து! மீறினால்.உன் தலை உருளும்!” ராஹ-ல் ஸாங்க்ருத்யாயன், மனித சமுதாய வரலாற்றை விவரிக்கும் நூலில் சமுதாயம், சுரண்டுபவர் சுரண்டப்படுபவர்