பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காலந்தோறும் பெண் பெண் வலிமை மிக்கவளாக முதன்மைக் கூறுகளுடன் விளங்கினால் நேருக்கு நேர் நின்று விரோதிகளை முறியடிப்பதுபோல் போராடவும் இயலாது. ஆதித்தாய்இவளில்லாமல் சமூக உற்பத்தியே நடக்காது. எனவே இவள் பகையரசன் அல்ல. மிருகங்களையும், ஏனைய பறவையினங்களையும் அடித்துத் துன்புறத்தி, அடங்கினால்தான் உயிர் வாழத் தேவையான உணவு என்று வழிக்குக் கொண்டு வரலாம். ஆனால் பெண்-இவள் சூக்குமமான அறிவுடையவள். நுட்பமான உணர்வுகளால் இன்ப துன்பங்களைப் புலப்படுத்தக் கூடியவள். அவனுக்கு இல்லாத மென்மையான ஆற்றல்கள் இவளுக்கு இயல்பாக இருக்கின்றன. இவள் தாய் ஆக்குபவள் பெற்றுப் பேணி வளர்ப்பவள்: அன்பும் கனிவும் கொண்டவள்; அத்துடன் வலிமை பொருந்தியவள்; வேட்டையாடுகிறாள், பகைவர்களை மூர்க்கமாக எதிர்க்கிறாள். குருதி கண்டு அஞ்சுபவளில்லை. பாதகம் செய்பவரை மோதி மிதிக்கும் ஆங்காரமும் இவளுக்கு இயல்பு. பழிவாங்கும் குரூர வெறியும் இவளுக்குப் புறம்பானதல்ல. இயற்கையுடன் ஆணைவிட நெருங்கியவள். நெருப்பாகவும், நீராகவும், கல்லாகவும், கனியாகவும் இருக்கக்கூடிய எதிர்மறைத் தன்மைகளின் இருப்பிடம். இன்றைய என் இளந்தோழி Slim, Fair என்ற ஒல்லி சிவப்பு இலட்சணங்களில் நெருங்காதவள். அவள் வாட்டசாட்டமாக இருக்கிறாள். உடை உணவு என்ற தேவைகளில் வசதி வலிமை என்ற கூறுகளையே முதன்மைப்படுத்துகிறாள். உழைப் பாற்றலும் சோர்விலா மகிழ்ச்சியும் உடையவளாக இருக்கிறாள். இவளில் அந்தப் பழந்தாயாரின் ஆதிப்பெண் மக்களின் அழகை நான் உணருகிறேன். வாயைத் திறந்து வைத்துக்கொண்டு பல்லைப் பிடுங்கிக் கொள், பொம்மையாக