பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O 6 காலமும் கவிஞர்களும் மேகநீர் மிகவும் வெப்பமாக இருக்கும் என்பது பெளதிக நூலார் கண்ட உண்மை ; கிட்டத்தட்ட 100°C-க்கு குறையாது அதன் வெப்பம் இருக்கலாம். இரணியனுடைய சுகானுபவத்தைக் கம்பன்,

  • கொண்டல் கொண்டநீர் குளிர்ப்பில என்றவன் குளியான்' என்று கூறுகின்ருன். மேகநீர் மிகவும் சூடாயிருப்பதால் அதில் அவன் நீராடமாட்டான் என்பது குறிப்பு." வேறு சில இடங்களில் நீராடான் என்று கூறி இதையும் குறிப்பிடுகின்ருன் கவிஞன்.

மருத்துவ இயல் : பண்டை இலக்கியங்களில் மருத்துவ இயல்பற்றிய செய்திகளையும், சிகிச்சை முறைகளையும் காணலாம். திருக்குறளிலுள்ள மருந்து’ என்னும் அதிகாரத்தில் நோய் வருவதன் காரணங்களை யும், அது வராது தடுக்கும் முறைகளையும், வந்தால் தீர்க்கும் வழியையும் பற்றிய பல்வேறு செய்திகள் தரப் பெறுகின்றன.

  • நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.’’’’ என்பது வள்ளுவரின் மருத்துவ முறை. நோய் வருவதன் காரணத்தையும் நோய் இன்னதென்பதையும் ஐயமறத் துணிந்து மருந்து செய்தல், உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய முறைகளை மேற்கொண்டு அந் நோயைப் போக்கவேண்டும் என்பது பண்டைய மருத்துவ முறையாகும். இன்றைய மருத்துவ முறையும் அதுதான். இன்னும் சில முறைகளைக் காண்போம். கண் முதலிய நுட்பமான பகுதிகளில் இரும்புத் தூள் முதலியவை புகுந்து கொண்டால் காந்தத்தைக் கொண்டு இக்காலத்தில் சிகிச்சை செய்கின்றனர். 11 கம்ப-யுத்த-இரணியவதை-4 12 குறள்-948