பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காலமும் கவிஞர்களும் யாமெலாம் வழுத்தும் துறவியென் றிருந்தும் ஒருத்திதன் இளமுலைச் சுவடு தோமுறக் கொண்டார் எனச்சிறை யிடல்போல் சுடர்மீனக் குகையுள்ஏ கம்பத்து 'ஓம்' மொழிப் பொருளே அடக்கிஆ னந்தம் உறுநர்வாழ் இடம்பல உளவால்.”* என்ற பாடலில் அடிகள் புனைந்துரைக்கும் கற்பனை யைச் சுவைத்து மகிழ்க. தமிழ் இலக்கியத்தில் பகலவன் தோற்றம், மறைவு, சந்திர உதயம் போன்ற காட்சிகள் சந்தர்ப்பங்களுக் கேற்றவாறு சுவையாக வருணிக்கப் பெற்றுள்ளன. கற்பனையின் பல உயர்ந்த கொடுமுடிகளே ஆங்காங்குக் காணலாம். அவற்றுள் ஒன்றிரண்டை மட்டிலும் ஈண்டுக் காட்டுவோம். எண்ணரிய மறையிைேடும் கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம்குவிப்ப வேலை என்னும் மண்ணும்அணி முழவு.அதிர வானரங்கில் நடம்புரிவாள் இரவி யான கண்ணுதல்வா னவன் கனகச் சடைவிரிந்தால் எனவிரிந்த கதிர்கள் எல்லாம்???? என்பது கம்பன் காட்டும் பகலவனின் தோற்றம். கதிர் களைப் பரப்பி வானரங்கில் எழும் கதிரவன் தோற்றம் ஆனந்தக் கூத்தாடும் ஆண்டவனே யொத்திருக்கின்ருன் என்று ஒப்புமை காட்டிப் பாராட்டுகிருன். பாரதியார்

  • காஞ்சிபுரா-திரு நகரப்படலம்-109. *" பாலகாண்டம்-மிதிலைக்.153.

பாஞ்சாலிசபதம்-செய். (147-151)