பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
126

126

10 திரைப்பட மொழிமாற்ற பெயர்ப்பு (Dubb ng Translation)

இலக்கியத்தையும் பிற துறை நூல்களையும் ஒரு மொழியி லி ந்து மற்ற மொழிகளுக்குப் பெயர்ப்பது டோன்றே ஒருமொழி யில் தயாரிக்கப்படும் ஒரு படத்தை வேற்று மொழிகளில் மொழி மாற்றம்' செய்ய வேண்டிய அவசிய, அவசரத் தேவை திரைப் பட உலகிற்குத் தேவைப்படலாயிற்று.

திரைப்படத் துறையில் ஏற்பட்ட அறிவியல் நுட்ப வளர்ச்சி யின் விளைவாக ஒரு மொழிப் படத்தை இன்னொரு மொழி பேசும் படமாக மொழிமாற்றம் செய்யும் உத்தி கண்டறியப் பட்டது. இதுவே, இன்று உலகெங்குமுள்ள திரைப்படத் துறை யினரால் கடைப்பிடிக்கப்படும் மொழிமாற்ற பெயர்ப்பு" (Dubbing Translation`gpspp.

திரைப்படத்தில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் மாற்றப்பட்ட வேற்று மொழியைப் பேசுவதால் அம் மொழியைச் சார்ந்த மக்கள் தத்தமது மொழிப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைப் பெறுகின்றனர். கதையோடும் உரையடால்களோ டும் கதாபாத்திரங்களின் குணவியல்புகளோடும் ஒன்றித் திரைப் படத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்.

இத்தகைய மொழிமாற்ற பெயர்ப்பில் பல்வேறு சிக்க் லகள் உள்ளன. இச்சிக்கல்களை உணர்ந்து, அதற்கொப்ப மொழி மாற்றம் செய்தாலொழிய வெற்றி கிட்டாது.

முதலாவது, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் உறையாடல்களின் பொருளை மாற்று மொழியில் பெயர்த் தால் மட்டும் போதாது பேசும் பாத்திரத்தின் உதட்டசைவுக்கு (Lip movements) ஏற்ப, உரிய சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் அதே சமயம் பாத்திரங்கள் முக பாவத்தாலும் அங்க அசைவுகளினாலும் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை முழுமை யாக உணர்த்தவல்லதாகவும மொழி மாற்றம் அமைய வேண்டு வது அவசியம் ஒரே சமயத்தில் இவை மூன்றையும் கருத்திலி ருத்திக் கவனமுடன் மொழி மா ற் ற மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டும.

இவ்வாறு மூல மொழியின் ஒலித்தடத்தின் வழியே மொழி, உதட்டசைவு, நடிப்புக்கேற்ப அதே ஒலித்தடத்தின்மீது மொழி மாற்றத்தைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது இடர்ப்பா டான பணி என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.