பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

ஒலிப்பெயப்பு

தமிழில் வந்து கலக்கும் பிறமொழிச் சொற்களை அப்படியே கையாள நேரும்போது அச்சொற்களின் ஒலியை அப்படியே தமிழில் தரும் பொருட்டு, அச்சொற்களின் ஒலியை தமிழில் பெயர்ப்பதே ஒலிபெயர்ப்பாகும் (Tranaliteration).

பிற மொழித் தாக்கமும் ஒலிபெயர்ப்பு இலக்கணமும்

மொழி பெயர்ப்பு தோன்றியபோதே ஒலி பெயர்ப்பும் தோன்றி விட்டதெனலாம். சங்க காலத்திற்கும் முன்பே ஒலி பெயர்ப்பில் மிகுந்த ஆர்வமும் அக்கரையும் மிக்கவர்களாகத் தமிழ் மொழியியலார் இருந்துள்ளனர் என்பதற்குத் தொல்காப் பியமே சிறந்த சான்றாக அமைந்துள்ளது, மொழிபெயர்ப்பைப் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்ட தொல்காப்பியர் ஒலி பெயர்ப்பைப்பற்றிக் கூறும்போது, ஒலி பெயர்ப்பு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதற்கு வரையரையோடு கூடிய இலக்கணமே வகுத்துக் கூறுகிறார்.

இதற்கு முக்கியக் காரணம் சங்க காலத்திற்கு முன்பிருந்தே பிற மொழிகளின் உறவும் அவற்றின் தாக்கமும் தமிழில் தவிர்க்க வியலா நிலையில் ஏற்பட்டு வந்ததே யாகும்.

இதனைச் சங்கப் பாடல்களின் வாயிலாகவே நம்மால் அறிந்துணர முடிகிறது.

"மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி'

எனவும்

"கலம்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்'

எனவும் சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தொழில் தொடர்பாக வும் கலை, வாணிகம் போன்றவற்றிற்காகவும் அரசியல் கார ணத்திற்காகவும் வேற்று மொழி பேசும் அந்நியர் தமிழ்மொழி