பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

181

களால் இக் கிரந்த எழுத்துகள் ஏற்கப்படாமலே இருந்து வந் துள்ளன. சமயத்தமிழ் இலக்கியங்களில்கூட இக் கிரந்த எழுத்து வடிவங்கள் விலக்கப்பட்டே வந்துள்ளன. மிக அரிதாகவே இவ் வெழுத்துகள் சமயத்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் ஒலிககுறையை நீச்க எழுந்த எழுத்துகள்

கிரந்த எழுத்துகளின் உருவாக்கத்திற்கான முழு முதற் காரணமே சமஸ்கிருதம் முதலான வடபுல மொழிகளின் ஒலி யைச் சிறிதும் பிசகாமல், உள்ளது உள்ளபடியே தமிழில் தரு வதேயாகும். இதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டே தமிழகத்தி லேயே இவ்வெழுத்துகள் உருவாக்கப்பட்டன என்பது இங்கு நினைவு கூறத்தக்க தாகும்.

இக் கிரந்த எழுத்துகளின் உறுதுணைபோடு கருத்துச் சிதைவோ பொருட் பிறழ்வோ இன்றி சமஸ்கிருதச் சொற்கள் தங்குதடையின்றி தமிழில் கூற இயன்றது. இதன் வாயிலாக வைதீக சமய உணர்வுகளும் கருத்துகளும் தத்துவச் சிந்தனை களும் கொள்கை கோட்பாடு களும் தாராளமாகத் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டன. கிரந்த எழுத்துகளின் துணையின்றி இச்சமய நுட்பக் கருத்துகளைத் தமிழில் தருவது அவ்வளவு எளி தாக இருக்கவில்லை.

கிரந்தப் போர்வையில் செல்வாக்குப்பெற்ற சமஸ்கிருதச் சொற்கள்

சமய அடிப்படையில் கிரந்த எழுத்துகளோடு கூடிய தமிழ்ச் சொற்கள் புனிதமாகப் போற்றப்படும் நிலையை எய்தின. எனவே, கிரந்த எழுத்தோடு கூடிய சமயத் தமிழ்ச் சொற்கள், சமய உணர்வு படைத்த மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெறவே செய்தன.

கிரந்தத்தால் வழக்கொழிந்தத தமிழ்ச் சொற்கள்

இவ்வாறு கிரந்த எழுத்து எளின் துணையோடு ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டு வழங் கப்பட்ட காரணத்தால், பல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக் கொழிய நேரிட்ட தென்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. இவ்வாறு நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிய நேரிட்டதோடு, கிரந்த எழுத்தோடுகூடிய சமஸ்கிருத தமிழ்ச் சொற்களைக் கையாண்டதன் மூலம் தமிழரின் நாகரிக பண்பாட்டுச் சிறப்பும் சிதைக்கப்படலாயின. சான்றாக, கிரந்தத் தமிழோடு கூடிய "கூடிவரம்’ எனும் சமஸ்கிருதச் சொல் அண்மைக்காலம்வரை தமிழ் மக்களிடையே அதிக அளவில் வழங்கிவந்தது. இன்றும்